ஒரே தொகுதியில் உறவினர்கள் போட்டி

கோராபுட், மே 6- ஒடிசாவில் குனுபூர் பேரவை தொகுதி வரும் 13ம் தேதி தேர்தலை சந்திக்கிறது. இந்த தொகுதியில் உறவினர்கள் 3 பேர் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுவதால் தேர்தல் களத்தில் சுவாரஸ்யம் கூடி உள்ளது. குனுபூர் தொகுதியில் ஆளும் பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த ரகுநாத் கமாங் தற்போது பேரவை உறுப்பினராக உள்ளார். வரும் தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிடுகிறார். ரகுநாத் கமாங்கின் மகள் வழி பேரனான சத்யஜித் கமாங் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேசமயம் சத்யஜித் கமாங்கின் மருமகன் திரிநாத் கமாங் பாஜ வேட்பாளராக களம் காண்கிறார். ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் எதிரெதிர் துருவ கட்சி வேட்பாளர்களாக போட்டியிடுவது சுவாரஸ்யத்தையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.