ஒரே நாளில் 1 லட்சம் பேர் பயணம்

சென்னை: பிப். 13: ஒரு லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த பேருந்து நிலையத்தில்.. பண்டிகை இல்லாத காலத்தில் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 (80%) அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 (20%) அரசுப் பேருந்துகள் என ஆக மொத்தம் 870 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் புதிய சாதனையை படைத்துள்ளது. ஒரு லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த பேருந்து நிலையத்தில்.. பண்டிகை இல்லாத காலத்தில் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என்று ஒரு பக்கம் மக்கள் சிலர் புகார் அளித்து வருகின்றனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.சமீபத்தில் கூட மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.