ஒரே நாளில் 18,313 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: ஜூலை. 27 – இந்தியாவில் கொரோனாவால் மேலும் 18,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 14,830 ஆக இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 39 லட்சத்து 38 ஆயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 57 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,26,167 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 20,742 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 571 ஆக உயர்ந்தது. தற்போது 1,45,026 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,486 குறைவு ஆகும்.