ஒரே நாளில் 21,411 பேருக்கு கொரோனா 67 பேர் பலி

டெல்லி: ஜூலை. 23 – நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: புதிதாக 21,411 பேர் பாதித்துள்ளனர். நேற்று முன்தினம் 21,566 நேற்று 21,880 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 21,411 ஆக குறைந்தது.
இதன் மூலம், நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,49,482லிருந்து 1,50,100 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 67 பேர் இறந்துள்ளனர்.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,997 ஆக உயர்ந்தது.