ஒரே நாளில் 9,520 பேருக்கு கொரோனா 41 பேர் பலி

டெல்லி: ஆகஸ்ட் 27 நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புதிதாக 9,520 பேர் பாதித்துள்ளனர்.

இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,98,696 ஆக உயர்ந்தது.

புதிதாக 41 பேர் இறந்துள்ளனர்.

இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,597 ஆக உயர்ந்தது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,83,788 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 87,311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.62% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.18% ஆக குறைந்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.20% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 2,11,13,94,639 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31,60,292 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.