ஒரே நாளில்756 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: ஜன. 8: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 756 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களையும் சேர்த்து தற்போது 4,049 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 24 மணி நேரத்தில் 5 பேர் தொற்றால் இறந்துள்ளனர். கேரளா, மகாராஷ்டிராவில் தலா 2 பேர், காஷ்மீர் ஒருவர் இறந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.