ஒரே பாரதம் உன்னத பாரதம் கொள்கைக்கு வலுசேர்த்த தீர்ப்பு!

டெல்லி, டிச. 12- அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது குறித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பைை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இந்தியாவில் இறையாண்மையையும், ஒருமைப் பாட்டையும் நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. 2019 ஆகஸ்ட் 5 அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவு அரசியல் சட்டப்படியான ஒருமைப் பாட்டை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதே அல்லாமல், ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகவே கூறியுள்ளது. 370-வது பிரிவு, நிரந்தர தன்மை கொண்டதல்ல என்ற உண்மையையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கின் பரந்தநிலப்பரப்பும், அமைதியான பள்ளத்தாக்குகளும், கம்பீரமான மலைகளும், கவிஞர்கள், கலைஞர்கள், சாகச வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பல தலைமுறைகளாக இடம்பெற்றுள்ளன.
இந்த பூமி அசாதாரணமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள இமயமலைவானத்தைத் தொட்டு நிற்கிறது. இங்குள்ள ஏரிகள்மற்றும் நதிகளின் நீர்ப்பரப்பு சொர்க்கத்தைப் பிரதிபலிக்கின்றன. துரதிருஷ்டவசமாக நூற்றாண்டு கால காலனிமயம், பொருளாதார மற்றும் மனம் சார்ந்த அடிமைத்தனம் காரணமாக இது பலவகையான குழப்பம் மிக்க சமூகமாக மாறியது. மிக அடிப்படையான விஷயங்களில் தெளிவான நிலையைஎடுப்பதற்கு மாறாக, இரட்டை நிலையை நாம் அனுமதித்தது குழப்பத்துக்கு வழிவகுத்தது. இத்தகைய மனநிலைக்கு மிகப்பெரிய பலியிடமாக ஜம்மு, காஷ்மீர் மாறியது சோகமாகும். எனது வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் இருந்து ஜம்மு, காஷ்மீர் மக்கள் இயக்கத்துடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஜம்மு, காஷ்மீர் கட்டமைப்பு குறித்து நான் சார்ந்திருக்கும் சித்தாந்தம் என்பது வெறுமனே ஓர் அரசியல் விஷயம் அல்ல. அது சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவது பற்றியது. நேரு அமைச்சரவையில் முக்கியமானபொறுப்பு வகித்த டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, நீண்ட காலத்துக்கு அரசில் நீடித்திருக்க முடியும். இருப்பினும், காஷ்மீர் பிரச்சினையால் அவர் அமைச்சரவையில் இருந்து விலகினார்.
தனது வாழ்க்கையை இழக்க நேரிடும் என்றபோதும், கடுமையான பாதையை அவர் தேர்வுசெய்தார். அவரது முயற்சிகளும், தியாகமும்,காஷ்மீர் பிரச்சினையுடன் கோடிக்கணக்கான இந்தியர்களை உணர்வு பூர்வமாக இணைப்பதற்கு வழிவகுத்தன. சில ஆண்டுகளுக்குப் பின், நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், சக்திமிக்க முழக்கத்தை முன்வைத்தார். ‘மனிதநேயம்’, ‘ஜனநாயகம்’, ‘காஷ்மீரியம்’ என்ற அந்த முழக்கம் மகத்தான ஊக்க சக்தியாக இருக்கிறது.