ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான 3 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை

பெங்களூர், ஜூ. 14-
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க கர்நாடக மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ10 லட்சம் வழங்கப்பட்டது இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த நிதியை முதல்வர் எடியூரப்பா இன்று வழங்கினார்.
முதல்வரின் அலுவலகமான கிருஷ்ணாவில் நடைபெற்ற விழாவில், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகாவின் விளையாட்டு வீரர் ஸ்ரீஹரி நடராஜ் அவர்களுக்கு ஊக்க காசோலை வழங்கப்பட்டது. விளையாட்டு வீரர்கள் ஆதித்யா அசோக் மற்றும் பாவத் மிர்சா ஆகியோர் சார்பில் அவர்களின் பெற்றோர்கள் இந்த நிதியை பெற்றுக் கொண்டனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றால் ரூ. 5 கோடி, வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.3 கோடி வெண்கல பதக்கம் வென்றால் ரூ. 2 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
நீச்சல் போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. 3 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது நமக்கு பெருமை அளிக்கிறது, இந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். விளையாட்டு வீரர்களா தங்கப்பதக்கம் வென்று நாட்டின் புகழை உயர்த்துவார்கள் என்று இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாராயணன் கவுடா தெரிவித்தார்.