ஒலிம்பிக் போட்டிக்கு மீராபாய் சானு தகுதி

புக்கெட், ஏப். 2- தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகரில் சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு சார்பில் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு 184 கிலோஎடையை (81 103) தூக்கி 3-வது இடம் பிடித்தார். இதன் மூலம் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளார் மீராபாய் சானு. 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான மீராபாய் சானு, 49 கிலோ எடைப் பிரிவு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து போட்டிதான் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான கடைசி தகுதி சுற்று போட்டியாக அமைந்துள்ளது.
இந்தத் தொடர் முடிவடைந்ததும் மீராபாய் சானு, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது முறைப்படி அறிவிக்கப்படும்.