ஒழுங்கு முற்றிலும் தோல்வி : சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூர்: ஜூலை. 15 – மாநிலத்தின் அமைதி மற்றும் ஒழுங்கு முழூதுமாக நிலை கெட்டிருப்பதுடன் அநியாயம் மற்றும் இம்சைகளுக்கு பலியாகியுள்ள மக்கள் போலீசாரின் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் என மாநில எதிர் கட்சி தலைவர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திறமையற்ற உள்துறை அமைச்சரின் பொறுப்பற்ற அறிக்கைகளால் போலீஸ் இலாகா தங்கள் சுய கௌரவத்தை இழந்துள்ளது என்றும் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தொடர் ட்வீட் செய்துள்ள சித்தராமையா பாகல்கோட்டெயின் கெரூரா பட்டணத்தில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அனுதாபம் தெரிவித்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் மாவட்ட போலீசார் பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களிடம் பேசி கலவரக்காரர்களுக்கு எதிராக எந்த தயவும் இன்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளேன். தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் நேரில் சென்று பார்ப்பது சரியில்லை என்று தெரிந்து அடுத்த சில நாட்களுக்கு பின்னர் இங்கு வந்துஇரண்டு குழுக்களையும் சந்தித்தேன் . இது போன்ற விஷயங்களில் தேவையில்லாமல் மக்களை உசுப்பிவிட்டு அமைதியை குலைக்கும் செயல்களில் யாரும் ஈடு பட கூடாது எனவும் சித்தராமையா தெரிவித்தார்.