ஓடும் லாரியில் தீ டிரைவர் கிளீனர் தப்பினர்

கார்வார் : ஜனவரி. 17 – தற்செயலாக தீ பிடித்து சிமெண்ட் மூட்டைகள் நிரம்பிய லாரி ஒன்று தீ பிடித்து எறிந்துள்ள சம்பவம் எல்லாபுரா தாலூகாவின் அரபைல் கட்டா அருகில் நடந்துள்ளது.
லாரி சிமெண்ட் மூட்டைகளை நிரப்பிக்கொண்டு ஹுப்லியிலிருந்து மங்களூர் மார்கமாக தேசிய நெடுஞசாலை 66 அரபைல் கட்டா வாயிலாக சென்றுகொண்டிருந்துளது. அப்போது தற்செயலாக லாரியில் தீ பிடித்துள்ளது. இந்த தீயில் லாரி முழுதும் எரிந்து சாம்பலாகியுள்ளது. ஆனாலும் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் க்ளீனர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணிந்துள்ளனர்.
பிரேக் லைனர் அதிக சூடானதில் தீ பிடித்து அதுவே லாரி சக்கரங்களுக்கு பரவியதில் இந்த விபத்து நடந்துள்ளது. எல்லாபுரா போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.