ஓட்டலில் வெடிகுண்டு வைத்தவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்: என்ஐஏ

பெங்களூரு, மார்ச் 12: தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஒயிட்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் வெடிகுண்டு வெடித்தவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வெடிகுண்டு வைத்தவர் பெங்களூரை நன்கு அறிவார். அவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பதும் என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியும். சந்தேக நபர் சிவனசமுத்திரம் மற்றும் குண்டுலுப்பேட்டை, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் முன்பு பயிற்சி பெற்றதாக தகவல் சேகரித்துள்ளனர். குண்டுவெடிப்புகள் மற்றும் தப்பித்து வாழும் முகாம்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதையடுத்து, விசாரணை குழுக்கள் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்த அன்று, சென்னையில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் பயணம் செய்து, அங்கிருந்து பஸ்சில் வந்து, கே.ஆர்.புரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய பிறகு, மகாதேவபுரா கிராஃபட் இந்தியா சர்க்கிளில் இறங்கி, பேருந்தை மாற்றி உள்ளார். அவர் புரூக்ஃபீல்டு நோக்கி பேருந்தில் ஏறி ராமேஸ்வரம் ஓட்டலுக்கு வந்ததாக இதுவரை நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்பு இந்த வெடிகுண்டு குக்கர் மற்றும் ஸ்டீல் பெட்டியில் தயாரிக்கப்பட்டது. தற்போது, சில்வர் பேப்பர் மற்றும் பை மூலம் அதிநவீனமாக தயார் செய்த தகவல் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. சந்தேக நபர், நேரடி வழிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாற்றுப்பாதையில் சென்று தனது ரகசிய இடத்தை அடைய நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்திருக்கலாம். தற்போது, ​​கர்நாடகம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சந்தேக நபரை தேடும் பணி நடந்து வருகிறது. எனினும், வெடிகுண்டு தாக்குதல் நடத்திய‌தாக சந்தேகிக்கப்படும் நபர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற செய்திக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், இவை அனைத்தும் ஊகங்கள் என்று கூறினார். சந்தேக நபர் கர்நாடகம் அல்லது மலையகத்தை சேர்ந்தவர் என ஊகங்கள் பரவி வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் என்று அவர் தெளிவுபடுத்தினார். ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் ஓட்டலில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதையடுத்து சிசிபி போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்பிறகு, என்ஐஏ-க்கும் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. எனினும் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.