ஓட்டல் தொழிலில் குதிக்கும் விராட் கோலி

மும்பை: செப் 3-
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி. உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் கோலி 61-வது இடத்தில் உள்ளார். அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்.
அவரது ஆண்டு வருமானம் ரூ.200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விராட் கோலி, ஓட்டல் தொழிலில் குதித்துள்ளார்.
அவர் மும்பையில் ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்ட்டை விராட் கோலி நடத்த உள்ளார். இந்த பங்களா, மும்பை புறநகர் பகுதியான ஜீஹுவில் உள்ளது.
இது தொடர்பாக கிஷோர்குமாரின் மகன் சுமித்குமாரை சந்தித்த விராட் கோலி, ஓட்டல் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார். பங்களாவில் ஏராளமான தாவரங்கள் உள்ளன. அவைகள் அகற்றப்படமாட்டாது என்றும் உணவகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய உணவகம், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-will-contest-congress-president-election-507582?infinitescroll=1