ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க பரிசோதனை

பெங்களூர், மார்ச் 7-
டிரைவர் இல்லாமல் தொழில்நுட்ப ரயில்கள் இயக்க 37 முன்மாதிரி சோதனைகளை நான்கு மாதங்களில் ‘நம்ம மெட்ரோ’ மஞ்சள் பாதையில் நடத்தப்பட உள்ளது.
நம்ம மெட்ரோ ரோலிங் ஸ்டாக் மேலாளர் ஜிதேந்திரா ஜா ஹெப்ப கோடியில் உள்ள மெட்ரோ டிப்போவில் ‘டிரைவர்ஸ் லெஸ்’ டெக்னாலஜி ரயில் குறித்து செய்தியாளர்களிடம் அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதிய ரோலிங் ஸ்டாக்கிற்கு (போகிகள்) பல சோதனைகள் தேவை.நிலையான மற்றும் மின்சுற்று, சோதனைக்காக போகிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் சோதனை பாதையில் முக்கிய சோதனை செய்யப்படும். அதன்பிறகு, நான்கு மாதங்களுக்கு 37 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.சிக்னலிங், தொலைத்தொடர்பு, மற்றும் மின்விநியோகம் அமைப்புகளுடன் கம்ப்யூட்டர் ஒருங்கிணைப்பு 45 நாட்களுக்கு பிறகு நடைபெறும். அலைவு சோதனைகள், மற்றும் பாதுகாப்பு சோதனைகள், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரால் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு மூலம் நடத்தப்படும் .வர்த்தக சேவை தொடங்க வேண்டுமானால், இந்த நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.
இது சீனாவின் சி.ஆர்.ஆர்.சி. யால் தயாரிக்கப்பட்ட அசல்வகை ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் ஆகும். மேலும் அசல் வகையில் இரண்டாவது ரயில் விரைவில் சீனாவில் இருந்து வரும். மீதமுள்ள 34 ரயில் பெட்டிகள், ஒரு செட்= 6 பெட்டிகள். மேற்கு வங்காளத்தில் உள்ள டிதாகர் ரயில்வே சிஸ்டம்ஸ் லிமிடெட் தயாரிக்கப்படுகின்றன. மூன்று பெட்டி ரயில்கள் வந்த பின்னரே, சோதனை நடத்தப்படும். ஏழு பெட்டிகள் வந்த பிறகு போக்குவரத்து தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.டிரைவர் இல்லாத தொழில்நுட்ப ரயில் தொடர்பால் அடிப்படையிலான ரயில் கட்டுப்பாடு மாதிரியில் இயக்கப்படும். ஆரம்பத்தில் லோகோ வகை ரயில்களின் பைலட்டுகள் நியமிக்கப்படுவார்கள். இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே, லோகோ பைலட் இல்லாமல் ஆபரேஷன் செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.
நம்ம மெட்ரோ துணை செயற்பொறியாளர் உமேஷ், மக்கள் தொடர்பு அதிகாரி ராமானந்தா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். டிசம்பரில் போக்குவரத்து துவங்கும்.
ஆர்.வி ரோடு, – பொம்ம சந்திரா இடையே கட்டப்பட்டு வரும் மஞ்சள் மெட்ரோ பாதை இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் இயங்கும்.
மொத்தம் 18.82 கிலோ மீட்டர் இந்த வழித்தடத்தில் பொம்ம சந்திரா, ஹெப்பக்கோடி அஸ்கர் ரோடு, இன்போசிஸ், கோனப்பன அக்ரஹாரா, எலக்ட்ரானிக் சிட்டி, பிரதின அக்ரஹாரா, ஓச பிராங்க் டே, சிங்க சந்திரா, கூட்லகி கேட், பொம்மனஹள்ளி, சென்ட்ரல் சில்க் போர்டு, பி.டி.எம். லே-அவுட், ஜெய தேவா மருத்துவமனை ராகிகுடா, ஆர்.வி. சாலைஎன மொத்தம் 16 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.வி. மஞ்சள் லைன் சாலையில் உள்ள கிரீன் லைன், ஜெயதேவா ஹாஸ்பிடல் நிலையில் உள்ள இளஞ்சிவப்பு லைனில் இணைக்கும்.