ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்

பெங்களூர், பிப். 17- ஹெப்பகோடி மெட்ரோ ரயில் டிப்போவிற்கு வந்திருந்த ஓட்டுநர் இல்லாமால் ஒட்டப்படும் இரண்டு இரண்டு பெட்டிகள் உட்பட ஆறு போகிகள் நேற்று தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது . நம்ம மெட்ரோ மஞ்சள் மார்கத்தில் விடப்படும் இந்த சிறப்பு ரயில்கள் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் இல்லாமல் ஒட்டப்படும் இந்த ரயில்கள் ஹெப்பகோடி டிப்போவிற்கு கடந்த புதன்கிழமை வந்து சேர்ந்தது . பின்னர் இவை க்ரேன் வாயிலாக நேற்று தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மெட்ரோ மஞ்சள் மார்க்கத்தின் ஆர் வி ரோடு நிறுத்தத்திலிருந்து பொம்மசந்திரா வரையிலான புதிய மார்கத்தில் இந்த புதிய ஓட்டுநர் இல்லாத இன்ஜின்கள் உள்ள மெட்ரோ ரயில்கள் ஒட்டப்பட்ட உள்ளது. இந்த இன்ஜினுடன் ஆறு பெட்டிகள் சேர்க்கப்பட்ட பின்னர் இந்த மார்கத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.