ஓட்டு போட்டால் தான் மரியாதை கவுரவம்- ரஜினி பேட்டி

சென்னை: ஏப். 19:
மக்களவை தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் 2024 தேர்தலை ஒட்டி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயமாக ஓட்டு போட வேண்டும். நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும் , கௌரவமும் இருக்கிறது. நான் ஓட்டு போடவில்லை என்று கூறுவதில் எந்த மரியாதையும் இல்லை இந்த கௌவுரவமும் இல்லை என்றார்.