ஓணம்: கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து

கோழிக்கோடு, செப்.8
ஓணம் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், ஓணம் பண்டிகைக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய வாழ்த்துச்செய்தியில், ஓணம் என்பது பாகுபாடுகளைக் கடந்து மனித மனங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும். செழிப்பு, வளம், அமைதி போன்ற கனவுகளை நிறைவேற்றும் பண்டிகை ஓணம் பண்டிகையாகும். ஓணத்தை ஒட்டி மக்கள் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட வேண்டும். இவ்வாறு பினராயி விஜயன் மக்களுக்கு ஓணம் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.