ஓபிஎஸ் இபிஎஸ்ஐ சந்திக்க திட்டமா?: சசிகலா

சென்னை : எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, ‘அ.தி.மு.க.வை இணைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சசிகலா பதிலளித்து பேசியதாவது:- தொடக்கத்தில் இருந்தே என் யுக்தியை பார்த்துக்கொண்டிருப்பீர்கள். இதற்கு மேல் வெளியே சொல்லக்கூடாது. நடந்துவிடும். எங்கள் கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்ன இருக்கிறது? உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் வகையில் நிச்சயம் செயல்படுவேன். தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க ஒற்றுமையுடன் இருந்து வெற்றியை எங்கள் தலைவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
இதை எண்ணி அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வுக்கு தக்க பாடத்தை நிச்சயம் அளிப்போம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

https://www.maalaimalar.com/news/district/tamil-news-sasikala-plan-to-meet-both-ops-eps-soon-561699