ஓம் சக்தி கோவிலுக்கு சென்ற பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்

பெங்களூர் : டிசம்பர். 23 – ஓட்டுனரின் கட்டுப்பாட்டு மீறி தனியார் பேரூந்து ஒன்று ஏரி கரையிலிருந்து உருண்டு விழுந்ததில் 20 பேர் காயமடைந்துள்ள சம்பவம் நகரின் புற பகுதியின் அத்திபெலே – சர்ஜாபுரா பிரதான வீதியின் பிதரகுப்பே ஏரி அருகில் நடந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 20 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் இவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலக்கிடமாயுள்ளது. தனியார் பேரூந்து ஒன்று சிக்கபெலந்தூரிலிருந்து ஓம் சக்தி கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த பேரூந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்துள்ளனர். ஏரி கரை மீது பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேரூந்து ஏரியில் கவிழ்ந்து விழுந்துள்ளது. உடனே அருகில் இருந்த கிராமத்தார் பேரூந்தில் இருந்த அனைவரையும் வெளியே எடுத்து மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஏரியின் மற்றொரு பகுதியில் முழுதுமாக தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில் அடுத்த பக்கம் பேரூந்து விழுந்ததில் பெரிய விபத்து மற்றும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது . தகவல் அறிந்த உடனேயே விபத்து நடந்த இடத்திற்கு அத்திபெலே போலீசார் விரைந்து வந்து பரிசீலனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.