ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியிடம் 1.27 லட்சம் மோசடி

பெங்களுர் : நவம்பர். 20 – தன்னுடைய ஆயுள் சான்றிதழை புதுப்பிக்க அரசு ஆவணங்களை பகிர்ந்துகொண்ட பின்னர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 1.27 லட்ச ரூபாய்கள் மோசடி செய்துள்ளது குறித்து பைட்டராயணபுரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் சான்றிதழ் என்பது ஓய்வு பெட்ரா அரசு ஊழியர்கள் தங்கள் பென்ஷனை பெற ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய ஆவணமாகும். இந்த ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்க ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தன்னுடைய வங்கியை நாடியுள்ளார். அப்போது குற்றவாளி தான் வங்கி ஊழியர் போல் நடித்து அவருடன் தொடர்பு கொண்டுள்ளான். பின்னர் அவருக்கு உதவுவதுபோல் நடித்து அதிகாரியின் அரசு அடையாள அட்டையை கேட்டுள்ளான். பின்னர் அவர் கணக்கில் இருந்து 1.27 லட்ச ரூபாயை அபகரித்துள்ளான் . இது குறித்து அவருடைய மகன் கூறுகையில் என்னுடைய ஓய்வு பெற்ற தந்தை சிவஸ்வாமி ஒரு இருதய நோயாளி. நான் என்னுடைய தந்தையின் கணக்கிருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு பைட்டராயணபுரா கிளைக்கு சென்றிருந்தேன் . பின்னர் அவர்கள் என்னிடம் எண் மற்றும் லிங்க் தெரிவித்தனர். நான் வாங்கி கொடுத்த எண்ணிற்கு போன் செய்தேன் . மற்றும் தந்தையின் அடையாள விவரங்களை தெரிவித்தேன். நான் ஏழெட்டு முறை வங்கிக்கு அழைப்பு விடுத்தபின்னரும் வங்கியில் இருந்து மீண்டும் அழைப்பதாக மட்டுமே தகவல் வந்தது. இரண்டு நாள் கழித்து ஏன் தந்தைக்கு வந்த போன் அழைப்பை பார்த்தேன். பின்னர் போனில் பேசிய இளம் பெண் ஒருவர் தான் வாங்கி ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டு என் தந்தையின் ஆயுள் சான்றிதழை புதிப்பிப்பதாக நம்பவைத்து நானும் நம்பிக்கையுடன் தந்தையின் அடையாள அட்டை விவரங்களை பகிர்ந்துகொண்டேன் . பின்னர் நான் என் வங்கியிலிருந்து ஓ டி சி பெற்றேன் . தகவலில் ஏன் வங்கி பெயரை நான தெரிவித்ததால் உடனே என் வங்கி கணக்கிலிருந்து மொத்த பணமும் சூறையாடப்பட்டது . என்னுடைய பெற்றோர் இருவரும் உடல் ஆரோக்யம் அற்றவர்கள் என்பதுடன் என்னுடைய அந்த பணம் தான் அவர்களின் அனைத்து செலவுகளுக்கும் தேவை . என தன்னுடைய புகாரில் ரோஹித் தெரிவித்துள்ளார்.