ஓ பி சி சான்றிதழ் ரத்து பிஜேபியின் சதி – மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா, மே 23- மேற்கு வங்கத்தில் 2010-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட அனைத்து ஒபிசி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 2012-ம் ஆண்டு கொண்டுவரபட்ட பிற்படுத்தபட்ட வகுப்பினர் சட்டத்திற்கு எதிராக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தவபிரதா சக்கரவர்த்தி, ராஜசேகர் ஆகியீர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், மேற்கு வங்க பிற்படுத்தபட்ட வகுப்பினர் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதிக்கு பின் 37 பிரிவினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நீதிபதிகள் ஏற்கனவே பணியில் உள்ள அல்லது இடஒதுக்கீட்டின் பலனை பெற்ற அல்லது அரசின் எந்த தேர்விலும் வெற்றிபெற்றவர்கள் இந்த தீர்ப்பால் பாதிக்கபடமாட்டார்கள் என்று கூறியுள்ளது.
இந்த தீர்ப்பின்மூலம் சுமார் 5 லட்சம் சான்றிதழ்கள் செல்லாததாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோம் என்றும்,
இதர பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு தொடர்ரும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வீடு வீடாக ஆய்வு நடத்தி, மசோதாவை தயாரித்து, சட்டசபையில் நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒன்றிய அமைப்புகளை பயன்படுத்தி சட்டத்தை முடக்க பாஜக முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.