கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் அம்பலம் – மோடி

டெல்லி: ஏப். 1: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகப் பிரதமர் மோடி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்தச் சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக இப்போது கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸை விமர்சித்து இருந்தார்.
இதற்கிடையே இப்போது அவர் திமுகவையும் விமர்சித்துள்ளார். இது தொடர்பான ஆங்கில செய்தி ஒன்றைப் பகிர்ந்த பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது. காங்கிரசும் திமுகவும் தங்கள் குடும்பங்களின் நலனைக் காக்க மட்டுமே இயங்கி வருகிறது. தங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் வளர்ச்சி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்களுக்குப் பொதுமக்கள் நலனில் கவலை இல்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், நமது ஏழை மீனவர்கள் நலன்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.