கஞ்சா கடத்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

மங்களூரு, ஜன.11-
பிரபல கல்லூரி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சேர்ந்து கஞ்சா கடத்தியதை போலீசார் தடுத்து முறியடித்தனர்.
பயிற்சி மருத்துவராக இருந்த டாக்டர். சமீர் (32), மணிமாறன் முத்து (28) ஆகியோர் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவர்களான டாக்டர் நதியா சிராஜ் (24), டாக்டர் வர்ஷினி பிரதி (26), டாக்டர் ரியா சத்தா (22), டாக்டர் ஹீரா பாசின் (23), மாணவர்கள் டாக்டர் பானு தஹியா (27), டாக்டர் க்ஷிதிஸ் குப்தா (23) முகமது ரவூப் என்ற கவுஸ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, போலி பிஸ்டல், டிராக்கர் பறிமுதல் செய்யப்பட்டதாக நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்தார்.
புகழ்பெற்ற கே.எம்.சி. அத்தவர், கேஎம்சி மணிப்பால், தெரல்கட்டே யெனெபோயா மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் இந்தக் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.2 டாக்டர்கள், 4 மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 10 பேர் கஞ்சா அருந்துதல் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி நீல் கிஷோரிலால் ராம்ஜி (38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.