கஞ்சா கடத்தி விற்பனை போலி ரயில்வே ஊழியர் கைது

பெங்களூரு செப்டம்பர் : 1 – ரயில்வே துறையின் ஊழியன் என்று சொல்லிக்கொண்டு போலி அடையாள அட்டையை தயாரித்து ரயில் மூலமாக கஞ்சாவை கடத்தி விற்பனை செய்து வந்த குற்றவாளி ஒருவனை உப்பர்பெட் போலீசார் கைது செய்துள்ளனர். முஹம்மத் அஸ்கர் என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளி. இவன் அசாம்மில் ஒன்றும் கதக்கில் இன்னொன்றுமாக இரண்டு திருமணங்கள் செய்துகொண்டுள்ளான். அஸ்ஸாமிலிருந்து பெங்களூருக்கு கஞ்சாவை கடத்திவந்த அஸ்கர் கஞ்சாவை கடத்த ரயில்வே ஊழியரை பதிவு செய்து அஸ்ஸாமில் ரயிலை சுத்தம் செய்ய சென்றபோது கஞ்சா பொட்டலங்களை குளிர்சாதன கோச்களில் மறைத்து வைத்து அங்கிருந்து பெங்களூருக்கு தருவித்துள்ளான் என தெரிய வந்துள்ளது. பூனாவில் ரயில்வே ஊழியன் என்று அடையாள அட்டை செய்திருந்த அஸ்கர் பெங்களூருக்கு ரயில் வந்து சேர்ந்த பின்னர் அந்த ரயில் சுத்தப்படுத்த போகும் வரையில் காத்திருந்து அங்கு சென்று கஞ்சாவை பெற்று வந்தான். தவிர குற்றவாளிக்கு ரயில்வே ஊழியர்கள் உடன் வலை தல தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது . தற்போது இவனை கைது செய்துள்ள போலீசார் கூடுதல் விசாரணைக்கு இவனை உட்படுத்தியுள்ளனர்.