கடத்தப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்

பெங்களூர்: ஜூன். 2 – சினிமா மாதிரியில் தக்காளி பெட்டிகளின் அடியில் செம்மரக்கட்டை துண்டுகளை ஒளித்து வைத்து கடத்த முயற்சித்த டாடா எஸ் வாகனத்தை மடக்கி பிடிப்பதில் பெங்களூர் கிராமத்தார போலீசார் வெற்றியடைந்துள்ளனர். தக்காளி பெட்டிகளின் அடியில் செம்மர துண்டுகளை ஒளித்து வைத்து கடத்துவது குறித்து கிடைத்த நம்பகமான தகவலின் பேரில் வரத்தூர் மற்றும் ஹோசகோட்டே மார்கத்தில் இந்த டாடா எஸ் வாகனத்தை போலீசார் துரத்தி மடக்கி பிடித்துள்ளனர். முதலில் போலிஸாரின் வாகனத்தை கண்டு அதிர்ந்து போன ஓட்டுநர் வாகனத்தை இப்படியும் அப்படியும் தாறு மாறாக ஒட்டி ஒரு எருமை மீதும் மோதியுளான். இதன் விளைவாய் வாகனத்தில் இருந்த செம்மர கட்டை துண்டுகள் வெளியே தெரிய வந்துள்ளது. இறுதியில் ஹோசகோட்டேவின் கட்டிகேனஹள்ளி அருகில் வாகனம் மற்றும் செம்மரக்கட்டைகளை அங்கேயே விட்டு விட்டு ஓட்டுநர் தப்பித்து ஓடியுள்ளான் . அங்கிருந்து ஹோசகோட்டே மேலூர் மார்கமாக அண்டை ஆந்திரா மாநிலத்திற்கு செம்மரத்தை கடத்த முயற்சித்துள்ளனர். வனத்துறை விழிப்பு  டி சி எப் கங்காதர் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையில் இறங்கி 500 கிலோ எடை கொண்ட 28 செம்மர கட்டைகளை கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 28 லட்சம் என கருதப்படுகிறது.