கடத்தல் தங்கம் சிகரெட் பறிமுதல் பெண் உட்பட 3 பேர் கைது

பெங்களூரு, செப்.14-
பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-2ல் தங்கம், சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பெண் பயணியிடம் இருந்து இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. புதிய முனையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். இந்தப் பெண்
ரூ 22.19 லட்சம் 376.2 கிராம் மதிப்புள்ள இரண்டு தங்கச் சங்கிலிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே இண்டிகோ விமானத்தில் துபாயிலிருந்து வந்த இரண்டு ஆண் பயணிகள் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த மற்றொரு ஆண் பயணி 8,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 348 அழகு கிரீம் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது