கடந்த 2 ஆண்டுகளில் 30 சதவிகிதம் அதிகரித்த பள்ளி கட்டணம்

பெங்களூர், மார்ச் 23 – நகரில் பெற்றோர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிக்கூட கட்டணங்கள் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக 58 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுக்க நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 312 மாவட்டங்களில் 27000 பேர் கலந்து கொண்டுள்ளனர் . இந்த ஆய்வில் நாட்டின் முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் பள்ளிக்கூட கட்டணங்கள் ஒரு லட்சத்திலிருந்து நான்கு லட்சமாக உள்ளது. பெங்களூரில் ஆயுவு மேற்கொண்ட 1619 பெற்றோரில் பத்து சதவிகிதத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிக்கூட கட்டணங்கள் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் மற்றும் 48 சதவிகிதத்தினர் பள்ளிக்கூட கட்டணங்கள் 30 முதல் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தவிர மாநில அரசு பள்ளிக்கூட கட்டணங்களை கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டது என 72 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். நகரின் சுப்ரமண்யபுராவில் வசிக்கும் பெற்றோர் என் சவிதா என்பவர் கூறுகையில் நான் என் ஆறு வயது குழந்தையை நகரின் தெற்கு பகுதியில் ஒரு பள்ளியில் சேர்த்துள்ளேன். இதில் பள்ளிக்கட்டணம் சென்ற ஆண்டை விட 10 சதவீதம் உயர்ந்திருப்பது தெரியவந்தது . என்றார் இதே போல் மேற்றொரு பெற்றோர் கூறுகையில் என் மகன் படிக்கும் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 15 சதவிகிதம் அதிகரித்து 3 லட்சத்திற்கு வந்துள்ளது. என்றார். இது குறித்து கர்நாடக மாநில பள்ளி மற்றும் கல்லூரி பெற்றோர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஏன் யோகானந்தா கூறுகையில் இந்த வகை கட்டண உயர்வுகள் சட்டத்துக்கு புறம்பானவை. தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிக்கட்டண விவரங்களை பொது அல்லது அந்தந்த பள்ளிகளின் வலைதளங்களில் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதை செய்வதில்லை . மாநில அரசு கண்டிப்பாக பள்ளிக்கூட கட்டண கட்டுப்பாடு ஆணையம் அமைக்க வேண்டும் அல்லது இது போல் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பபடி கட்டணங்களை உயர்த்தி பணம் சுருட்டுவதை தவிர்க்க சட்டம் கொண்டு வர வேண்டும். என்றார் . இதே வேளையில் கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் நிர்வாக கூட்டமைப்பை சேர்ந்த டி சசிகுமார் கூறுகையில் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள உரிமை உண்டு. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு காரணமற்ற கட்டண முறையை நிரப்பந்திக்க முடியாது .ஆனால் பள்ளிகள் தங்கள் கட்டண விவரத்தை பொதுவில் தெரிவிக்கவேண்டியது அவசியம் என்பதை அரசு உறுதிப்படுத்தலாம். இப்படி 30 முதல் 50 சதவிகித பள்ளிக்கட்டண உயர்வுகள் என்பது விவாதத்திற்கு உரியது . பிரபல பள்ளிக்கூடங்கள் ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீத கட்டணத்தை உயர்த்தக்கூடும் . ஆனால் எந்த பள்ளிக்கூடமும் 10 அல்லது 15 சதவீதிதற்கும் அதிகமாக கட்டணங்களை உயர்த்துவது இல்லை. என்றார். எது எப்படியோ … 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை நிறுவி நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி எளிதாக கிடைக்க வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜரின் கனவு இந்த ஜென்மத்தில் பலிக்கப்போவதாக தெரிய வில்லை.