கடனை திருப்பி செலுத்த நிதி நிறுவனம் தொல்லை – பெண் தற்கொலை

சிக்கமகளூரு, அக்.7-
சிக்கமகளூரில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனம் ஒன்றில் விவசாய பெண் ஒருவர் வட்டிக்கு பணம் வாங்கியவர் திருப்பி செலுத்த தவறியதால் நிதி நிறுவனத்தினர் கொடுத்த தொல்லையால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது:
சிக்கமகளூரு, கடூர் தாலுகாவின் தங்கலி என்ற கிராமத்தல சேர்ந்தவர் தேவரம்மா(65).
இவர் கடன் தொல்லையால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திடம் 78 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
வாரத் தவணையில் பணம் செலுத்த வேண்டும். ஆனால் அவர் சில மாதங்களாக வட்டியும் அலசும் செலுத்த வில்லை. இதனால் பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து கடன் பெற்றதை செலுத்துமாறு வலியுறுத்தி தொல்லை கொடுத்தனர்.
அவர்கள் பைனான்ஸ் நிதி கம்பெனிக்கு வந்து நிலைப்பாடு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட தேவம்மா வேறு வழியில்லாமல் நிலைமையை சொல்ல பைனான்ஸ் கம்பெனிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் மழை இல்லை வறட்சியால் பணம் செலுத்த முடியாமல் போனது என்பதை தெரிவித்துள்ளார்.
ஆனால் என்ன செய்வாயோ, எது செய்வாயோ எங்களுக்கு தேவை பணம்.பணம் இல்லாமல் இந்த அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாது என்றுகாலை முதல் மாலை வரை பிடித்து வைத்து டார்ச்சர் கொடுத்துள்ளனர் .
அவர் என்னவென்று அறியாமல் மிகுந்த வருத்தத்துடன் மன உளைச்சலில் அலுவலகத்தில் இருந்தார். மாலையில் அவரை விடுவிக்கப்பட்டனர்.வீட்டிற்கு சென்றதும் மன உளைச்சல் தாங்காமல் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் பைனான்ஸ் நிறுவனம் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.