கடன் மீதான வட்டி அதிகரிப்பு

மும்பை : ஜூன். 8 – அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ கட்டணத்தை 0.50 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியிருப்பதுடன் இதனால் வாகனங்கள் , வீடு , மற்றும் தனி நபர் கடன்களின் மீதான வட்டி விகிதம் அதிகரிக்க உள்ளது. இத்துடன் ஆர் பி ஐ ஐந்து வார கால கட்டத்தில் இரண்டாவதும் முறையாக ரெபோ கட்டணத்தை 50 பேஸிஸ் புள்ளிகளை அதிகரித்துள்ளது . வங்கியின் மே மாத துவக்கத்தில் நிச்சயமற்ற கூட்டத்தை கூட்டி ரெபோ கட்டணத்தை அதிகரிக்க பெரும்பான்மையான வாக்குகள் போட்டிருந்தது . வர்த்தக தலைநகர் மும்பையில் ஆர் பி ஐ கவர்னர் ஷக்திகாந்ததாஸ் இன்று நிதி கொள்கைகளை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரெபோ கட்டணத்தை 0.50 சதவிகிதம் அதிகரித்துள்ளோம். இதனால் திருத்தப்பட்ட ரெபோ கட்டணம் தற்போது 4.90 சதவிகிதமாகியுள்ளது என தெரிவித்தார். பணவீக்கத்திதை கட்டுப்படுத்த ரெபோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் பணவீக்க அளவு ஒன்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.9 சதவிகிதமாக உள்ளது என ஆர் பி ஐ கணக்கிட்டுள்ளது . பல்வேறு மாநிலங்களின் எரிபொருள் மீதான வேட் வரியை மேலும் குறைத்ததால் பணவீக்க அளவு சற்று குறையும் என்ற நம்பிக்கை உள்ளது .

மே நான்கு அன்று 40 பேஸிஸ் புள்ளிகள் உயர்ந்திருப்பதன் பின்னணியில் ரெபோ கட்டணமும் அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி குறித்து கூறுவதெனில் பொருளாதார சமாளிப்பு வேகம் கொண்டிருப்பதுடன் 2022-23 நிதியாண்டில் ஜி டி பி வளர்ச்சி தோராயமாக 7.2 சதவிகிதமாக உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல் படுத்தப்பட்ட லாக் டவுனால் உண்டான விளைவுகளை குறைக்கும் நோக்குடன் ஆர் பி ஐ மார்ச் 27, 2020ல் 75 புள்ளிகளிலிருந்து 4.40 சதவிகிதத்திற்கு குறைத்தது . ஆர் பி ஐ பிப்ரவரி 2023 வளர்ச்சிகளை தோராயமாக 7.2 சதவிகிதமாக இருக்கும் என கணக்கிட்டுள்ளது. இதே வேளையில் கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிராம பகுதிகளில் ள்ள கூட்டுறவு வங்கிகள் வீடு கடன் அளிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும் . பண வீக்க சதவிகிதம் 75 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்திருப்பதுடன் இதனால் உணவு பொருள்களின் விலை தற்போது விண்ணை தொட்டுள்ளது . இவ்வாறு ஆர் பி ஐ கவர்னர் ஷக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.