கடலில் மூழ்கி 2 பேர் சாவு

பட்கல், ஜூன் 11 ஜூன் 11-முருடேஸ்வரர் கடலில் மூழ்கி இருவர் பலியான கோர சம்பவம் நேற்று நடந்துள்ளது.கோலார் மாவட்டம் சீனிவாச புராவை சேர்ந்த 12 இளைஞர்கள் ஒரு குழுவாக வட கன்னடா மாவட்டம், பட்கள் நகரில் பிரசித்தி பெற்ற முருடேஸ்வர் கடற்கரைக்கு நேற்று காலை சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் குளிக்க கடலில் இறங்கினர்.
அப்போது ராட்சஷ அலை ஒன்று மூவரையும் இழுத்து சென்றது.இதை கவனித்த அப்பகுதியினர் இருவரை காப்பாற்றினர்.
அபிஷேக் (21) நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இவரது உடலை போலீசார் தேடுகின்றனர். அதேபோன்று சிவமொகா ஆகும்பே வில் இருந்து மற்றொரு குழுவினர் முருடேஸ்வர்க்கு வந்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீச்சல் அடிக்கும்போது சுஷாந்த் என்பவரும் அவரது சித்தப்பாவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சுஷாந்த் (21) நீரில் மூழ்கி உயிரிழந்தார் .
அவரு சித்தப்பாவை காப்பாற்றப்பட்டுள்ளனர்