கடலைக்காய் திருவிழாவிற்கு வந்த ரவுடி கைது

பெங்களூர்: நவம்பர். 23 – பசவனகுடியில் ஆண்டுதோரும் நடக்கும் சிறப்புவாய்ந்த கடலைகாய் திருவிழாவிற்கு கொலை, கொலைமுயற்ச்சி மற்றும் பல்வேறு புகார்களில் தேடப்பட்டுவந்த பிரபல ரௌடி ப்ருத்வி என்ற ரௌடி போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளான் .
நகரில் நடந்து வரும் கல்லக்காய் திருவிழாவில் கடவுளை தரிசிக்க வந்திருந்த ரௌடி பட்டியலில் உள்ள ப்ருத்வி மற்றும் அவனுடைய கூட்டாளி பூஷன் ஆகியோரை பசவனகுடி போலீசார் கைது செய்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோரும் நடக்கும் கடலைகாய் திருவிழாவிற்கு வந்து இறைவனின் தரிசனத்தை பெற்று வந்த ரௌடி பிருத்வி வழக்கம் போல் இந்தாண்டும் கோயிலுக்கு வருவது குறித்து போலிஸாருக்கு உறுதியாக தெரிந்திருந்தது . இது குறித்து தகவல் அறிந்த பசவன்குடி போலீசார் ப்ருத்வி வருகைக்காக அங்கு காத்திருந்தனர். அதன்படி கடலைக்காய் திருவிழாவிற்கு வந்த ரௌடி பட்டியலில் உள்ள ப்ருத்வி மற்றும் அவனுடைய கூட்டாளி பூஷன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பசவன்குடி , வில்சன் கார்டன் உட்பட பல போலீஸ் நிலையங்களில் பிருத்வி தேடப்படும் குற்றவாளியாய் இருந்திருக்கும் நிலையில் பசவன்குடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.