கடுமையாக தாக்கி முதியவர் கொலை

பெங்களூர்: செப்டம்பர். 10 – முதியவர் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் சர்ஜாபுரா போலீஸ் சரகத்தில் நடந்துள்ளது. சர்ஜாபுரா போலீஸ் நிலையத்தின் பின்பக்கம் உள்ள ரேணுகா எல்லம்மா லே அவுட்டில் இந்த கொலை நடந்துள்ளது. இந்த லே அவுட்டில் வசித்து வந்த சீத்தப்பா (85) என்பவர் கொலையுடைவர். கத்தி அறுப்பு விவகாரமாக சிறைதண்டனை அனுபவித்து வெளியே வந்திருந்த பவன் என்ற ரௌடி சீத்தப்பாவை தங்கியுள்ளான். இந்த தாக்குதலில் படு காயமடைந்த சீத்தப்பா சிகிச்சை பலனின்றி இறந்து போயுள்ளார் . குற்றவாளி பவன் தாலூகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ரமேஷ் என்பவரின் மகன் என தெரியவந்துள்ளது . இதே பகுதியின் புகார்தாரர் ஹேமந்த் என்பவனை அழைத்த போது அவன் வரவில்லை என்பதால் பவன் தன் கூட்டாளிகளான ரோஹித் , சுமன் , யஸ்வந்த் , மற்றும் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து ஹேமந்த் மீது கடந்த ஆகஸ்ட் 28 அன்று இரவு தாக்கியுள்ளான் . இதற்கு ஹேமந்த் குடும்பத்தார் பழி வாங்க வந்த போது முதியவர் சீத்தப்பா மீது சகட்டு மேனிக்கு தாக்கியுள்ளனர். இது குறித்து காயமடைந்த நேத்ரா , மனு மற்றும் நஞ்சேஷ் (ஹேமந்த் வீட்டார்) போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த தாக்குதல் சீதாப்பாவின் சாவால் கொலை விவகாரமாக மாறி விசாரணை நடந்து வருகிறது.