கடும் கோடை வெயிலால் மாம்பழ விளைச்சல் பெரும் பாதிப்பு

கோலார், மார்ச் 22-
மாம்பழ விளைச்சல் இந்த கோடை வெயிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பூக்கள், பிஞ்சுகள் தொடர்ந்து உதிர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். கோடை வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரித்து வருவதால், கோலார் மாவட்டத்தில் மாம்பழம் உற்பத்தி இம்முறை பெரும் பாதிப்பை சந்திக்கிறது.
கோலார் மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் மாம்பழம் பயிரிடப்பட்டுள்ளது.
இதில் சீனிவாசப்பூர் தாலுகாவில் மட்டும் 36,000 ஹெக்டேர் மாம்பழம் பயிரிடப்பட்டுள்ளது. வெயில் அதிகரிப்பு காரணமாக மாமரத்தின் பூக்கள் அதிகளவு உதிர்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கடந்த 2022-23 ம் ஆண்டில் புள்ளி நோயால் பாதிக்கப்பட்டது. அதை காட்டிலும் தற்போது பூக்கள் உதிர்வதை ஆல் அதிக பாதிப்பாக தெரிகிறது.
60% பூக்கள் உதிர்ந்து நாசமாகியுள்ளது. அதனுடன் சிறு சிறு மா பிஞ்சுகளும் தற்போது உதிர்ந்தவாறு உள்ளது.
சீனிவாசப்பூரில் மாம்பழ உற்பத்தி 20 டன் கிடைத்து வந்தன. ஆனால் தற்போது நான்கு டன் மாம்பழம் கிடைக்குமா என்பதே சந்தேகம். எவ்வளவுதான் மருந்து தெளிப்பு செய்தாலும், பயனில்லை. மழை இல்லாததால் இதன் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது.
தற்போது விவசாயிகள் மழையை எதிர்பார்க்கிறார்கள். மழை பெய்தால் 30 முதல் 40 சதவீத அளவில் மகசூல் பெறலாம் என அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒன்றரை மாதமாக மருந்து தெளித்தும் பூக்கள் உதிர்வதை தடுக்க முடியவில்லை. மாம்பழம் பதப்படுத்தும தொழில் துறையை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆயினும் உற்பத்தியில் எதிர்பார்த்த அளவு பயன் தரவில்லை.விவசாயிகள் பாதிப்பில் தத்தளிக்கின்றனர் எனவே அரசின் நிவாரண உதவியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்