கடும் பனிமூட்டம்:சங்கிலி தொடர் விபத்து 4 பேர் பலி

ஹூப்ளி : ஜனவரி. 6 – இரண்டு கார்கள் மற்றும் லாரிக்கிடையே நடந்த நேருக்கு நேர் சாலை விபத்தில் நான்கு பேர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்துள்ள சம்பவம் தார்வாட் மாவட்டத்தின் குந்தகோலா தாலூகாவின் பெல்லிகட்டி க்ராஸ் அருகில் நடந்துள்ளது. பெங்களூர் – மும்பை தேசிய நெடுஞசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு குந்தகோலா போலீசார் நேரில் சென்று ஆய்வுகள் நடத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தவிர இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் ஹூப்ளி நகரின் கிம்ஸ் மருத்துமனையில் சேர்க்கப்ட்டுளனர். விபத்து நடந்த இடத்திற்கு தார்வாட் எஸ் பி முனைவர் கோபால பெக்கொட் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார். இந்த விபத்தில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் மற்றும் பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளனர். இறந்தவர்கள் மணிகண்டா (21) , பவனா (23) , ஹரீஷ் (34) சந்தனா (31) என தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் ஹாசனிலிருந்து கோவாவுக்கு சென்றுள்ளனர். இதில் ஹரீஷ் என்பவன் பெங்களூரிலிருந்து சீரடிக்கு புறப்படவேளையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதே வேளையில் பெங்களூரு மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த ஒருவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற இளைஞன் கேரளாவை சேர்ந்த 23 வயதான ஷாரோண் என தெரிய வந்துள்ளது . இவன் நேற்று இரவு 7.30 மணியளவில் ரயில் வரும்போது வேண்டுமென்றே ரயில் தண்டவாளத்தில் குதித்திருப்பது தெரியவந்துள்ளது. இவன் தன் நண்பனுடன் ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்திருந்தான். . தவிர மெஜஸ்டிக் ரயில் நிலையம் செல்ல டிக்கெட்டும் பெற்றிருந்தான். ஆனால் மெட்ரோ ரயில் வந்த பொது உடனே தண்டவாளத்தில் குதித்துள்ளான். இவனுடைய நிலைமை தற்போது கவலைக்கிடமாகியுள்ளநிலையில் மெட்ரோ ஊழியர்கள் இவனை தனியார் மருத்துவமணையில் சேர்த்துள்ளனர் ரயில் இவன் மீது மோதியிருப்பதில் கால் எலும்புகள் முறிந்திருப்பதுடன் தவிர தலையிலும் மின்சார தாக்குதல் ஏற்பட்டுள்ளது . இந்த சம்பவம் குறித்து பீன்யா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.