கடும் பனிமூட்டம் – பெங்களூரில்3 பஸ்கள் மோதல் 30 பேர் காயம்

பெங்களூர் : டிசம்பர். 27 –
கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன
தேசிய நெடுஞசாலை 4 நெலமங்களாவின் தோணுச்சினகுப்பே அருகில் தொடர் சாலை விபத்து ஏற்பட்டதில் 30 பேர் காயமடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நின்றிருந்த லாரி மீது மூன்று தனியார் பேரூந்துகள் மோதியதில் 30 பேர் காயமடைந்தது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் இவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது. இந்த தொடர் விபத்தால் நெடுஞசாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதுடன் தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெலமங்களா போக்குவரத்து போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு வழி செய்து கொடுத்தனர். துர்காம்பா , ஸ்ரீகங்கா , மற்றும் டான் ஆகிய தனியார் பேரூந்துகள் துமகூரிலிருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்தன. அப்போது இந்த விபத்து நடந்துள்ளது. லாரி மீது முதலில் டான் பேரூந்து மோதியுள்ளது. இந்த பேரூந்தின் பின்னாலேயே வந்துகொண்டிருந்த துர்காம்பா பஸ் ஓட்டுநர் இந்த விபத்தை பார்த்து பேரூந்தை சாலை ஓரத்தில் நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அப்போது பின்னல் வந்துகொண்டிருந்த சிவகங்கா பேரூந்து இந்த பேரூந்தின் மீது மோதி உள்ளது. இந்த தொடர் விபத்தில் காயமடைந்தவர்களை ஏழு ஆம்புலன்சுகள் வாயிலாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துக்கு பின்னர் க்ரேன் வாயிலாக பேரூந்துகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல் கார் ஏறி மூன்று வருட குழந்தை இறந்துள்ள சம்பவம் பீதர் நகரின் கும்பா வீதியில் நடந்துள்ளது. பசவச்சேதானா என்பவன் இறந்து போன குழந்தை . இவன் ஹாருகேறி பகுதியில் வசித்து வரும் சதீஷ் பாட்டில் மற்றும் சங்கீதா ஆகியோரின் புதல்வன். குழந்தை மீது கார் ஏறிய சம்பவம் அருகில் உள்ள சி சி டி வி காமிராக்களில் பதிவாகியுள்ளது. indha விபத்து குறித்து காந்தி கஞ்ச போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.