கடும் பனிமூட்டம் விமான சேவை பாதிப்பு

புதுடெல்லி:ஜன.22- கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இன்றும் விமான சேவைகள் பாதிக்கபட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஏராளமான விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமாகியுள்ளது. டெல்லியில் 2 வாரங்களாக தொடரும் பனிமூட்டத்தால் காலை நேரங்களில் விமான சேவைகள் தொடர்ந்து பாதிப்படைந்துள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் கடும் பனுமூட்டம் நிலவி வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.3 டிகிரியாக பதிவாகி இருப்பதால், அடர்ந்த மூடுபனியால் குறைந்த தெரிவுநிலையுடன், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (ஐஜிஐ) அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.