கட்சிக்கு வருபவர்களுக்கு தடை இல்லை -துணை முதல்வர்

சாம்ராஜ் நகர் ஆக.26-
கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மாற்றுக் கட்சியினரை எங்கள் கட்சிக்கு இழுக்க ஆபரேஷன் ஹஸ்திரா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, ஆனால் கட்சியில் சேர நினைப்பவர்களை தடுக்க முடியாது. எங்களை நம்பியவர்களிடமும் நம்பிக்கை காட்ட வேண்டும்” என்றார்.
பிரதமரின் வருகையின் போது விதிகள் பின்பற்றப்படவில்லை என்ற பாஜக தலைவர் அசோக்கின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து அவர்
எதிர்க்கட்சித் தலைவரை எப்படி தேர்வு செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை, பிரதமர் மோடியின் வருகை குறித்து அவர் விமர்சித்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் வரக்கூடாது, முதல்வர் வரக்கூடாது, துணை முதல்வர் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு புரோட்டோகால் தெரியும் ஆனால் அதை வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இவ்வாறு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறினார்