கட்சி மாறி ஓட்டு பீதி – காங்கிரஸ்எம்எல்ஏக்கள் சொகுசு ஓட்டல்களில் சிறை வைப்பு

பெங்களூர் : பிப். 26 – ராஜ்ய சபா தேர்தலில் குறுக்கு வாக்களிப்பு குறித்த பீதி இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் இன்று மதியம் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்க பட உள்ளனர். ஆளும் கட்சி எம் எல் ஏக்கள் ஓட்டல்களிலிருந்தே நாளை காலை வாக்களிக்க வர உள்ளனர் . ராஜ்யசபாவின் நான்கு இடங்களுக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று பேரும் மற்றும் தேசிய முற்போக்கு கூட்டணியின்(என் டி ஏ ) இரண்டு பேர் களத்தில் உள்ளனர். இதில் மூன்று இடங்களை வெல்லும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பினும் தேசிய முற்போக்கு கூட்டணி வாக்கு குறைபாடு உள்ள நிலையிலும் டி குபேந்திரா , ரெட்டியை இரண்டாவது வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளது. சுராபுரா எம் எல் ஏ ராஜா வேங்கடப்ப நாயகா , காலமானதால் மேலவையில் இன்று இரங்கல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இந்த இரங்கல் அறிக்கைக்கு பின்னர் விதான சௌதாவிலிருந்து நேராக ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர் . கோரமங்களாவில் உள்ள எம்பசி கால்ப் லிங்க் பிசினஸ் பூங்காவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ஓட்டலில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் இன்று மாலி 6 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடக்க உள்ளது. எந்த எம் எல் ஏ யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக உள்ள அஜய் மாகன் , சையத் நாசீர் ஹுசேன் , மற்றும் ஜி சி சந்திரசேகர் ஆகியோரும் iஇந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். எம் எல் ஏக்களை ஓட்டலுக்கு அழைத்து வரும் பொறுப்பை பைரதி சுரேஷ் , கிருஷ்ண பைரே கௌடா உட்பட சில அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தின் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் கட்டாயமாக இன்று மேலவை கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டலுக்கு செல்வது குறித்து கவனம் செலுத்துமாறும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . சர்வோதயா கர்நாடகா கட்சியின் தர்ஷன் புட்டானய்யா , சுயேச்சை எம் எல் ஏ லதா மல்லிகார்ஜுனா மற்றும் கே ஹெச் புட்டசாமிகௌடா ஆகியோரையும் ஓட்டலுக்கு வரவழைத்து தங்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.