கட்டிப் பிடித்த ஹர்திக் பாண்டியா.. சரமாரியாக திட்டிய ரோஹித் சர்மா

அகமதாபாத், மார்ச் 25-குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது. 2024 ஐபிஎல் தொடரில் இதுவே மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியாகும். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. Get the Latest IPL 2024 Updates on MyKhel Schedule|Points Table|News முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தனது பதவியை பறித்ததால் அதிருப்தியுடன் இருந்த நிலையில், பாண்டியா கேப்டன்சியில் இந்தப் போட்டியில் பங்கேற்றார். மும்பை அணியின் பந்துவீச்சின் போது பல முறை பாண்டியாவுக்கு, ஆலோசனைகளை கூறினார் ரோஹித் சர்மா. ஆனால், அவர் சிலவற்றை பின்பற்றி விட்டு, பல விஷயங்களில் தனது முடிவை செயல்படுத்தினார் பாண்டியா. பின்னர் போட்டியில் 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா, கோபத்தில் இருந்த ரோஹித் சர்மாவை சமாதானம் செய்யும் நோக்கில் ரோஹித் சர்மாவை கட்டிப் பிடித்தார். ஆனால், ரோஹித் சர்மா பாண்டியாவை பார்த்ததும் கோபத்துடன் பேசத் துவங்கினார். போட்டியில் ஹர்திக் பாண்டியா எடுத்த சில முடிவுகளை சுட்டிக் காட்டி அவர் விமர்சித்து பேசினார். அதை ஹர்திக் பாண்டியா பொறுமையாக கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் மூலம் முதல் போட்டியிலேயே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பிம்பம் அடி வாங்கி இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா போன்ற பிற மூத்த வீரர்களின் ஆலோசனைகளையும் ஹர்திக் பாண்டியா பெறுவார் என கருதப்படுகிறது. இனியும் ஹர்திக் பாண்டியா “நான் தான் கேப்டன்” என்ற மனநிலையில் தன்னிச்சையாக செயல்பட நினைத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் ஏற்படக் கூடும். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது சரியான முடிவா? தவறான முடிவா? என இன்னும் சில போட்டிகளில் தெரிந்து விடும்.