கட்டோரி சாட் செய்யும் முறை


வட மாநிலங்களில் மிகவும் ரசித்து உண்ணப்படும் சிற்றுண்டி கட்டோரி ஆகும். கட்டோரி என்றால் கிண்ணம் என்று பொருள். பூரியை கிண்ணம் போல் செய்து உண்பது கட்டோரி ஆகும்.
உள்ளே நிரப்ப : முளை வந்த உங்களுக்கு பிரியமான பயிறுகளை வேக வைத்து கொள்ளவும். பச்சை பயிறு, காபூல் கல்லை , பயன் படுத்தலாம். வெவ்வேறு பயறுகளை சேர்த்தோ அல்லது ஒரே பயிரையோ உங்களுக்கு தேவைக்கேற்ப பயன் படுத்தலாம். வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் வெந்த பயிறு, அரை ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் கார தூள், உப்பு, எலுமிச்சர் சாறு சேர்த்து வருது வைக்கவும். வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய், கொத்துமல்லி ஆகிய மூன்றையும் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை சட்னி: ஒரு பிடி கொத்துமல்லி, ஒரு பிடி புதினா, நான்கு பச்சை மிளகாய் அரை எலுமிச்சை பழ சாறு உப்பு போட்டு ருப்பி பச்சை சட்னி செய்து கொள்ளவும்.
இனிப்பு சட்னி: நான்கு ஸ்பூன் புலி சாறு சிறிதளவு வெல்லம், போடவும். இதை சற்று கொதிக்க வைத்து இனிப்பு சட்னி செய்யவும்.
கட்டோரி: கட்டோரிக்கு ஒரு லோட்டா சிரோட்டி ரவை, அரை லோட்டா மைதா மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு இரண்டு ஸ்பூன் குளுமையான வெண்ணெய், உப்பு சற்று நீர் சேர்த்து கெட்டியாக கலக்கவும். முதலில் அரிசி மாவு மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பின்னர் மற்றவற்றை சேர்த்து கலக்கவும். கலந்த கலவையை பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் பூரியைவிட சிறிதாக உருண்டைகள் செய்யவம். முடித்தவரை மெலிதாக தரட்டவும். சிறிய சிறிய ஸ்டீல் கிண்ணங்களில் சற்று எண்ணெய் தடவவும். தரட்டிய மாவை கிண்ணங்களில் நன்றாக ஓட்ட வைக்கவும். பின்னர் மாவின் ஓரங்களை கொழுக்கட்டைக்கு மடிப்பது போல் மடிக்கவும். முள் கரண்டி கொண்டு அங்கங்கு குத்தவும். கிண்ணத்துடன் காய்ந்த எண்ணையில் நிதானமாக போட்டு வேக வைக்கவும் . மாவு நன்றாக வெந்த பின்னர் கிண்ணத்தில் இருந்து தனியாகிவிடும்.பின்னர் கிண்ணத்திலிருந்து வெந்த மாவை நிதானமாக வெளியே எடுக்கவும். பின்னர் பூரி மொறு மொறு வென்று ஆகும் வகையில் இரண்டு பக்கமும் வேகும்படி வறுக்கவும். பின்னர் கிண்ணங்களில் முதலில் பயிறுகளின் கலவையை பின்னர் அதன் மீது தயிர் ( தயிருடன் சற்று சர்க்கரை சேர்க்கலாம்) பச்சை சட்னி, இனிப்பு சட்னி, வெங்காயம் ,தக்காளி வெள்ளரிக்காய் கொத்துமல்லி சாட் மசாலா மற்றும் சேவ் போட்டு உடனே (தாமதித்தால் பூரிகள் மிருதவாகிவிடும்) உண்ண கொடுக்கவும்.