கணவனை விட்டு செல்லமாட்டேன் பாகிஸ்தான் பெண் பிடிவாதம்

பெங்களூர் : ஜனவரி , 25 – நான் இந்தியாவிலேயே இருப்பேன் . கணவனுடனேயே இறப்பேன். இதற்க்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தருமாறு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் இளம் பெண் போலீசாரிடம் கண்ணீர் விட்டு கூறியுள்ளாள் . நான் காதலித்த இளைஞனுக்காக நாடு விட்டு வந்துள்ளேன். அவனை திருமணமும் செய்து கொண்டுள்ளேன். அவனை விட்டு நான் செல்ல மாட்டேன் என அடம் பிடித்துள்ளாள். காதலுக்காக தன்னுடைய நாட்டையே விட்டு வந்து இந்தியனை திருமணம் செய்து கொண்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜிவாணி நான் இங்கேயே இருப்பேன் . பாகிஸ்தானுக்கு போக மாட்டேன் . நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளோம். கணவன் முலாயம் சிங்க் யாதவை விட்டு செல்ல மாட்டேன். என அடம் பிடித்து வருவது போலீசரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பெண் இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என அடம் பிடித்துவந்தாலும் சட்டத்தில் இதற்க்கு இடம் இல்லை. எந்த நிலையிலும் அவளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப போலீசார் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மற்றும் வெளியுறவு அதிகாரிகள் இந்த பெண் இந்தியாவிற்குள் வந்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அவளை எப்படியும் பாகிஸ்தானுக்கு அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு தொடர்பான ஏஜென்சிகளுடன் வெளியுறவு அதிகாரிகள் இது குறித்து தொடர்பில் உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த இந்த பெண்ணை திருப்பி அனுப்ப எப்படியும் இரண்டு மாதங்கள் பிடிக்கும். இதனால் இரண்டு நாடுகளின் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி பெண்ணை திருப்பி அனுப்ப வேண்டும். தற்போதைக்கு இந்த பெண்ணை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பும் விஷயமாக வெளியுறவுத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிரா நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.