கணவன் மனைவி சண்டையில் 3 வயது குழந்தை பலி

பெங்களூர் : ஜனவரி : 25 – கணவன் மனைவி சண்டையில் குழந்தை ஒன்று இறந்துள்ள சம்பவம் ஹாரோஹள்ளி தாலூக்காவின் கோதூறு என்ற கிராமத்தில் நடந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே நடந்த சண்டை தீவிரமடைந்த நிலையில் விஷம் குடித்த மனைவி தன் குழந்தைக்கும் விஷம் ஊட்டியதில் இதை குடித்த மூன்று வயது குழந்தை தீக்ஷித் கௌடா என்பவன் இறந்துள்ளான். மற்றொரு பக்கம் குழந்தையை இழந்த குடும்பத்தாரின் சோகம் மிகவும் தீவிரமாக இருந்தது. ஹரோஹாள்ளி ஒன்றியத்தின் கோதூறு கிராமத்தை சேர்ந்த சோமசேகர் மற்றும் பூர்ணிமா தம்பதியினர் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டவர்கள். குடுமப விஷயமாக இவர்கள் இருவருக்குள் அடிக்கடி சண்டைகள் தகராறுகள் நடந்து வந்துள்ளது நேற்று இந்த சண்டை தீவிரமடைந்த நிலையில் பூர்ணிமா தான் விஷம் குடித்ததுடன் தன் மூன்று வயது மகனுக்கும் விஷத்தை ஊட்டியுள்ளார் . மயக்கமடைந்த நிலையில் இருந்த குழந்தையின் நிலையை பார்த்த குடும்பத்தார் உடனே தாய் மகன் இருவரையும் ஹாரோஹள்ளி அருகில் தயானந்த சாகர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தை தீக்ஷித் கௌடா சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோயுள்ளான் . பூர்ணிமா உயிராபத்திலிருந்து தப்பியுள்ளார் . கணவன் மனைவி சண்டையில் ஒன்றும் அறியாத மூன்று வயது குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது. பின்னர் குழந்தையின் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹாரோஹள்ளி போலீசார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி கணவன் மனைவிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.