கண்காணிப்பு கேமரா

மும்பை, ஜனவரி. 17 நவிமும்பை மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நவிமும்பை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிட்டு உள்ளது. நவிமும்பை மாநகராட்சி 79 தொடக்க பள்ளிகள், 53 உயர்நிலை பள்ளிகளை நடத்துகிறது. இதில் 52 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 55 பள்ளிகள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் தொடர்பாக மக்கள் தொடா்பு அதிகாரி மகேந்திர கோண்டே கூறுகையில், “முதல் கட்டமாக 55 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.