கதகளி நடனம் ஆடிய வயநாடு மாவட்ட கலெக்டர்

திருவனந்தபுரம்: ஜன.2
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டராக இருப்பவர் கீதா. கலெக்டர் கீதா கதகளி நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர். இதற்காக கோட்டக்கல் உண்ணிகிருஷ்ணன் என்பவரிடம் கதகளி நாட்டியம் பயின்றார். பின்னர் வயநாட்டில் கலெக்டர் பொறுப்பு ஏற்றதும் அங்கு நடந்த வள்ளியூர் காவு ஆறாட்டு விழாவில் கதகளி நடனம் ஆடினார்.
அந்த நடனம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் அவர் புத்தாண்டு தினத்தையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் மீண்டும் கதகளி நடனம் ஆடினார். அந்த நாட்டியத்தில் அவர் தமயந்தியாக வேடம் அணிந்திருந்தார்.
பெண்களுடன் அவர் நளினமாக ஆடிய கதகளி ஆட்டம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
இதுபற்றி கலெக்டர் கீதா கூறும்போது, குருவாயூர் கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர் வேடம் அணிந்து கதகளி ஆட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எனக்கு தமயந்தி வேடத்தில் ஆடவே வாய்ப்பு கிடைத்தது. இதுவும் மனதுக்கு நிறைவாக உள்ளது, என்றார்.