
சென்னை: அக்.31-
இந்தியாவில் பொதுவாகவே உணவின் சுவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அப்படித் தான் ஆந்திராவின் உணவுகள் காரத்திற்குப் பெயர்போனது. பல இந்தியர்களுக்கே இந்தக் காரம் அவ்வளவு ஈஸியாக செட் ஆகாது. அப்படியிருக்கும்போது இந்தக் காரத்தை வெளிநாட்டு இளைஞர் ஒருவர் சாப்பிட்டுவிட்டுத் திணறிய வீடியோ டிரெண்டாகி வருகிறது. நமது நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் சமையல் இருக்கும். இதனால் ஒரே உணவாக இருந்தாலும் கூட ஊரைப் பொறுத்து டேஸ்ட் மாறிக் கொண்டே இருக்கும்.. அப்படி ஆந்திரா உணவுகளுக்கு அதன் தனித்துவமாக இருப்பதே அதன் காரம் தான். அங்குப் பயன்படுத்தப்படும் மிளகாய், அதிலும் அந்த குண்டூர் மிளகாய் உணவுகளுக்கு வேற ஒரு டேஸ்ட்டை கொடுக்கிறது. குண்டூர் காரம் இந்த குண்டூர் மிளகாயைத் தான் ஆந்திராவில் பெரும்பாலான உணவுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவை உணவுகளுக்கு நிறத்தை மட்டும் தருவதில்லை.. காரசாரமான சுவையையும் தருகிறது. இவை உணவுகளின் இயற்கையான சுவையை மேம்படுத்துகிறது. அங்கு ஊறுகாய்கள், சட்னி என அனைத்திற்கும் பினிஷிங் டச் போலச் சுவை பூர்த்தி செய்வது இந்தக் காரம்தான். இந்தியர்கள் பொதுவாகவே காரம் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால், ஆந்திரா உணவு மற்ற மாநிலங்களில் உள்ள இந்தியர்களுக்குக் கூட அதீதக் காரமாகவே தெரியும். அப்படிப்பட்ட உணவைக் காரமே பெரிதாக எடுத்துக் கொள்ளாத வெளிநாட்டு இளைஞர் சாப்பிட்டால் என்னவாகும்.. அப்படியொரு சம்பவம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.ஆந்திரா உணவு அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் உள்ள ஆந்திரா பவனில் காரசாரமான ஆந்திர உணவைச் சாப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை தான் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தான் ஒரு இந்திய உணவகத்தில் இருப்பதாகவும், தன்னால் ஆந்திரா காரத்தைத் தாங்க முடியும் என்று இந்திய நண்பரிடம் பெட் கட்டியதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடுகிறார். கதறல் அவர் பேசும்போது அவரது குரல் சற்றுத் தடுமாறுகிறது.. உணவு அந்தளவுக்குக் காரமாக இருந்துள்ளது. அவரது முகம் முழுக்க வியர்த்துக் கொட்டுகிறது. காரத்தைச் சமாளிக்க முடியாமல் அவரது முகம் சிவந்து போய் இருந்தது. மேலும் அவர், “நான் உண்மையான காரத்தைக் கையாள முடியும் என்று நினைத்தேன்… ஆனால், கடைசியில் காரம் தான் என்னைக் கையாண்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் டப்ளினில் உள்ள ஆந்திரா பவன் சாப்பிட்ட போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. குறிப்பாகச் சிவந்த முகத்தோடு அவர் கொடுத்த ரியாக்ஷனை பார்த்தாலே தெரிகிறது அவர் இதற்கு முன்பு இவ்வளவு காரத்தைச் சாப்பிட்டிருக்கவே மாட்டார் என்று..! இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.















