கத்தார் வரும் ரசிகர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

புதுடெல்லி நவ-18
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண கத்தார் வரும் ரசிகர்களுக்கு உடை கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது
கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகிற 20-ஆம் தேதி தொடங்குகிறது. மிகவும் சிறிய நாடான கத்தாரில் இது போன்ற போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். கத்தார் நாட்டு மக்களின் எண்ணிக்கை 30 லட்சம் ஆகும். இந்த நிலையில் 15 லட்சம் ரசிகர்கள் கால்பந்து போட்டியை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்பந்து போட்டிக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை அந்த நாட்டு அரசு செய்துள்ளது. மேலும் போட்டி தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வரை அந்த நாட்டுக்கு உலகக்கோப்பை போட்டியை காண வரும் ரசிகர்கள், அந்த நாட்டு குடிமக்களை தவிர வேறு யாரும் வரத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது .
மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் ரசிகர்களுக்காக ஏராளமான தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரையில் மூன்று பெரிய கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
அதில் மட்டும் 5000 அறைகள் உள்ளன. இதுவரை 90 ஆயிரம் அறைகள்முன்பதிவு செய்யப்பட்டாலும் இன்னும் 25 ஆயிரம் வரையில் காலியாக உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. போட்டிக்கு வருபவர்கள் பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தலாம் பஸ், ரெயில் ,மெட்ரோ ஆகியவை இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடக்கும் போது ரசிகர்கள் மேல் சட்டையை கழற்றி அசைக்க கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கத்தார் நாடு முஸ்லிம் நாடு என்பதால் அங்கு உடை தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ளன. உலககோப்பை போட்டிக்காக ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தாலும் ஓட்டல்கள், கடற்கரையில் மட்டுமே நீச்சல் உடை அணிய அனுமதி உண்டு .
போட்டி நடைபெறும் இடங்களில் மேல் சட்டையை கழட்டக்கூடாது பெரும்பாலும் உடம்பின் மேல் பகுதி , முழங்கால் பகுதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .
மேலும் கத்தார் நாட்டுக்கு வரும் யாரும் மது கொண்டு வர அனுமதி இல்லை .இதற்கான தனியாக உரிமம் வழங்கப்பட்ட உணவு விடுதிகள் மற்றும் ரசிகர்கள் கூடும் மையங்களில் பீர் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா நாட்டு கடன் அட்டைகளும் செல்லுபடி ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர்