
பெங்களூர் : மார்ச் -7 – வெளி மாநில பயணியரை வழியில் ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி கத்தி காட்டி மிரட்டி பணம் அபகரித்த இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களை பையப்பனஹள்ளி ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். பானசாவடியில் வசித்து வந்த ஆர்.ரூபின் (40) மற்றும் சேவாநகரை சேர்ந்த யுவராஜ் (39) ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளாக இருப்பதுடன் இவர்களிடமிருந்து குற்றத்திற்கு பயன் படுத்திய ஆட்டோ , மொபைல் போன்கள் மற்றும் ஒரு ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக எஸ் பி சௌமியா லதா தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கௌஹாத்தியிலிருந்து ரயிலில் பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். கடந்த மார்ச் 2 அன்று நகருக்கு வந்த இவர்கள் பின்னர் மாகடி வீதியில் உள்ள சுமனஹள்ளிக்கு ஆட்டோவை பேசியபோது 600 ரூபாய் கேட்டுள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட இளைஞர்கள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துள்ளனர். ஆட்டோவை சிறிது தூரம் ஒட்டி சென்ற ஓட்டுநர் ரூபின் நான்கு பேரும் தலா 600 ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இதற்கு இளைஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதே வேளையில் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் அங்கு வந்து இவர்களை சமதமபடுத்தும் முயற்சியில் இறங்குவது போல் நடித்து கத்தி காட்டி இளைஞர்களை இருவரும் சேர்ந்து மிரட்டி பணம் பரித்துள்ளனர். என சௌமியா லதா தெரிவித்துள்ளார்.