கனமழை கர்நாடகம் தத்தளிப்பு

பெங்களூர் : ஜூலை 31 – கடந்த சில நாட்களாக விடுப்பு கொடுத்த வானவராயன் மீண்டும் தன் விஸ்வரூபத்தை எடுத்துள்ளான். மாநில தலைநகர் பெங்களூர் , தும்கூர் , கலபுரகி , பெலகாவி , விஜயபுரா மற்றும் சாமராஜ்நகர் உட்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது . மின் கசிவால் துமகூருவில் ஒருவர் இறந்துள்ளார். நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது . கலபுரகியில் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் பல கிராமங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தவிர துமகூருவில் பெரும் மழை பெய்து வருகின்றது. இதனால் பெரும் சேதங்கள் உண்டாகியிருப்பதுடன் மக்கள் பெரும் பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளமார். இந்த மழையால் சிவமூக்காம்பிகை நகரில் மின்சார கசிவால் 70 வயது வீரண்ணா என்பவர் இறந்துள்ளார்.இன்று அதிகாலை 3 மணியளவில் பெய்த மழையால் வீடுகளுக்குள் நீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் மின் கசிவால் வீரண்ணா இறந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது பல இடங்களில் மரங்கள் மின் கம்பங்கள் விழுந்துள்ளன அவைகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது என்றாலும் தொடர்ந்து மழை பெய்வதால் அந்தப் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது பெங்களூரில் மழை பொரட்டி போட்டது பல இடங்களில் மரங்கள் வேரோடு விழுந்தன மின்கம்பங்கள் சாய்ந்தன மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர் பெங்களூரின் தாழ்வான குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தும் அதன் பாதிப்பு தொடர்கிறது பெங்களூரில் உள்ள பெரிய மோரி கால்வாய்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
மழை பாதிப்பு பணிகளை சரி செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது இந்த நிலையில் மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது