கனரா வங்கி பெண் ஊழியர் பலி

குடகு, ஆகஸ்ட் 19- குடகு மாவட்டம்விராஜ்பேட்டை தாலுகா அம்மாட்டியில் இரண்டு ஸ்கூட்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் ஸ்ரீசுரு பகுதியைச் சேர்ந்த அம்ரிதா (24) பலியானது தெரியவந்துள்ளது.. கனரா வங்கி ஊழியரான இவர் நேற்று இரவு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த மற்றொரு ஸ்கூட்டர் மோதி அம்ரிதா கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சைக்காக மைசூர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து விராஜ்பேட்டை ஊரக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.