கனவு காணும் சித்த ராமையா குமாரசாமி கடும் தாக்கு

பெங்களூர் : ஆகஸ்ட். 3 – சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முதல்வர் ஆவேன் என மன கோட்டை கட்டுகிறார். கட்டட்டும் . மாநில மக்கள் தான் இறுதி முடிவை தெரிவிப்பார்கள் என முன்னாள் முதல்வர் ஹெச். டி குமாரசாமி தெரிவித்துள்ளார். சித்தராமோத்ஸவத்தால் காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும் . இது குறித்து நான் தற்போதைக்கு எதுவும் பேச மாட்டேன். அவர்களின் பனிப்போர்கள் பற்றி நான் அரசியல் செய்யமாட்டேன் என தெரிவித்திருப்பதுடன் சித்தராமோத்ஸவாவிற்கு வரும்போது அவருடைய தொகுதி தொண்டர் ஒருவர் இறந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அந்த தொண்டருக்காக ஒரு அனுதாபமும் தெரிவிக்க வில்லை . இது அவர்கள் தங்கள் தொண்டர்களை நடத்தும் விதம். தொண்டன் இறந்தாலும் அதை பற்றி யாரும் கேட்கவில்லை. தொண்டனுக்கு மதிப்பளிக்காமல் சித்தராமையா வீராவேசத்துடன் பேசி வருகிறார். சித்தராமோத்ஸவா குறித்து எனக்கு எந்த அக்கறையும் இல்லை. ம ஜ தா சார்பில் நாங்கள் ஜலதாரே நிகழ்ச்சியை நடத்தினோம் . இவர்கள் இப்போது நடத்தியிருப்பது அதில் ஐம்பது சதவிகிதமும் இல்லை. எங்களின் ஜலதாரே நிகழ்ச்சிக்கு முன்னர் சித்தராமோத்ஸவா நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. 7 லட்சம் , 8 லட்சம் , 20 லட்சம் என கூறி வருகின்றனர். அவர்களின் கணக்குக்கு அர்த்தமே இல்லை. எங்களிடம் அனைத்து தகவல்களும் உள்ளது என குமாரசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.